×

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கோர்ட் பணிகள் நிறுத்தம் ஏப்.30வரை நீட்டிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம்,  மதுரை கிளை உட்பட தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளை ஏப்ரல் 30ம் தேதி வரை நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் நீதிமன்ற பணிகளை நிறுத்தி வைப்பது என்று உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளதாக தலைமைப் பதிவாளர் சி.குமரப்பன் கடந்த மாதம் 24ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டார். இதையடுத்து, பல முக்கிய வழக்குகள் வீடியோ கான்பரன்ஸ், ஜூம் ஆப் என்ற வலைத்தளம், தொலைபேசி ஆகியவற்றின் வாயிலாக விசாரிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இந்நிலையில், ஊரடங்கு ஏப்ரல் 30வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை, சார்பு நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் உயர் நீதிமன்ற நிர்வாகக் குழுவின்  மார்ச் 24ம் தேதியிட்ட உத்தரவு ஏப்ரல் 30ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் ஜெனரல் குமரப்பன் அறிவித்துள்ளார்.


Tags : Court of Appeal ,coronation proceedings ,Madras High Court ,Corona Court ,Stop Preventive Action , Corona, Madras High Court, Madurai Branch High Court
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த...